Categories
உலக செய்திகள்

“இத போட்டா” கொரோனா பாதிக்காது… பரிந்துரை செய்த வல்லுனர்கள்…. ஏற்குமா சுகாதாரத்துறை….?

இஸ்ரேலில் கொரோனா தொடர்பான தடுப்பூசியின் 4 ஆவது டோஸ்ஸை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் செலுத்திக் கொண்டால் 3 முதல் 5 மடங்கு ஆபத்தான உடல்நலக்குறைவு ஏற்படுவதிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என்று அரசுக்கான ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது.

சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவுக்கு எதிராக அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு தீவிரமாக தடுப்பூசியினை செலுத்தி வருகிறது.

அதன்படி இஸ்ரேலில் கொரோனா தொடர்பான தடுப்பூசியின் 4 ஆவது தவணையை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் செலுத்திக்கொள்ள அந்நாட்டின் அரசு ஆலோசனை குழு பரிந்துரை செய்துள்ளது.

அவ்வாறு கொரோனா தடுப்பூசியின் 4 ஆவது தவணையை செலுத்திக் கொண்டால் 3 முதல் 5 மடங்கு ஆபத்தான நோய் பாதிப்பு ஏற்படுவதிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

ஆனால் இதற்கு சுகாதாரத்துறை அங்கீகாரம் கொடுத்தால் மட்டுமே இந்த ஆலோசனை நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |