Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இத பிடிக்குறதுக்கா இவ்வளவு தகராறு…. தொழிலாளருக்கு நேர்ந்த கொடூரம்…. மனைவி உட்பட 4 பேர் கைது….!!

மதுரையில் மரக்கரி உற்பத்தியாளர் கொலை வழக்கில் மனைவி உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பெரியசாமி என்பவர் அவரது மனைவி சாந்தியுடன் வசித்து வந்தார். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் மரக்கரி உற்பத்தி செய்யும் தொழிலை மேற்கொண்டு வந்ததோடு மட்டுமல்லாமல் அத்தோட்டத்தில் இரவில் முயல் வேட்டையிலும் ஈடுபடுவார். இந்நிலையில் பெரியசாமி அவரது தோட்டத்திற்கு அருகே இருக்கும் மற்றொரு தோட்டத்தினுள் உள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த திருமங்கலம் காவல் துறையினர் பெரியசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து விசாரணை செய்ததில் திடுக்கிடும் உண்மை வெளியானது.

அதாவது பெரியசாமிக்கும்  அவரது தம்பி மகனான மொக்கச்சாமிக்கும்  இடையே முயல் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது.இதில் ஆத்திரமடைந்த மொக்கச்சாமி அவரை கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார். இச்சம்பவத்திற்கு உடந்தையாக மொக்கச்சாமி மூன்று நண்பர்கள் இருந்திருக்கிறார்கள். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த செய்தியினை மொக்கசாமி பெரியசாமியின் மனைவியிடம் கூறியுள்ளார். ஆனால் அவர் போலீசிடம் தகவல் கொடுக்காமலிருந்திருக்கிறார். இதனால் காவல்துறையினர் பெரியசாமியின் மனைவி உட்பட கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள்.

Categories

Tech |