Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இத தூக்கிட்டு மேளதாளத்தோட போயிருக்காங்க…. காளியம்மன் கோவில் திருவிழா…. மதுரையில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்….!!

மதுரையிலிருக்கும் காளியம்மன் கோவிலில் திருவிழா கோலாகலமாகவும் பிரம்மாண்டமாகவும் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலிருக்கும் மானூத்து கிராமத்தில் காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை சுற்றியுள்ள மக்கள் அனைவரும் அம்மனை தினமும் தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் இக்கோவிலில் இருக்கும் அம்மனுக்கு திருவிழா நடைபெற்றது.

இத்திருவிழாவில் காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றதோடு நறுமண மலர்களால் சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. மேலும் திருவிழாவில் விரதமிருந்த பெண்கள் கோவிலிலிருந்து முளைப்பாரியெடுத்து மேளதாளம் முழங்க வீதிவீதியாக சென்றனர். மேலும் சில பெண்கள் மாவிளக்கு எடுத்து அம்மனை தரிசனம் செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து விழாவினை சிறப்பித்தனர்.

Categories

Tech |