புனேவில் பசுவை உடல் ரீதியாக தொந்தரவு செய்த 22 வயதான இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
புனேவில் சதீஷ் தக்டா என்பவர் கடந்த மே 31-ஆம் தேதி தனது பசு திடீரென கத்தும் சத்தம் கேட்டதாக கூறினார். அப்போது மாட்டு தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த பசுவை ஒரு இளைஞன் உடல் ரீதியாக துன்புறுத்தி வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். குற்றவாளி தீபக் ராஜ்வாடாவை சதீஷ் அடையாளம் கண்டுகொண்டார். பின்னர் கத்தி கூச்சலிடவே தீபக் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இருப்பினும் வீட்டில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகி இருந்தது. இதுபற்றி சதீஷ் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் குற்றவாளியை அவரது வீட்டில் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.