Categories
சினிமா தமிழ் சினிமா

வெங்கட் பிரபுவின் படத்தில் நடித்துள்ள பா. ரஞ்சித்… தீயாய் பரவும் புகைப்படம்…!!!

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 600028 படத்தில் பா. ரஞ்சித் நடித்த காட்சியின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் பா.ரஞ்சித் அட்டக்கத்தி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதன்பின் பா ரஞ்சித் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து கபாலி, காலா ஆகிய இரண்டு மாஸ் படங்களை இயக்கி அசத்தினார் . பா ரஞ்சித் இயக்குனராக மட்டுமல்லாமல் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு உள்ளிட்ட சில திரைப்படங்களை தயாரித்துள்ளார் .

தற்போது இவர் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் சார்பட்டா பரம்பரை திரைப்படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் பா.ரஞ்சித் துணை இயக்குனராக பணிபுரிந்த போது சென்னை 600028 படத்தில் ஒரு கிரிக்கெட் போட்டியின் காட்சியில் நடித்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |