Categories
உலக செய்திகள்

இத்தாலி சென்ற நரேந்திர மோடி….. போப் பிரான்சிஸ் உடன் சந்திப்பு….!!!!

இத்தாலி சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி தனது பயணத்தின் முக்கிய நிகழ்வாக வாடிகன் நகரில் நேற்று போப் பிரான்சிஸ்ஸை சந்தித்து பேசினார்.

இந்தியா உள்ளிட்ட 20 வளரும் நாடுகள் அடங்கிய ஜீ 20 அமைப்பின் மாநாடு இத்தாலி நாட்டில் ரோம் நகரில் 2 நாட்கள் நடக்கிறது. இத்தாலி பிரதமர் மரியோ டிராக்கி அழைப்பின் பெயரில் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். மேலும் இங்கிலாந்து கட்டுப்பாட்டில் உள்ள ஸ்காட்லாந்தில், கிளாஸ்கோ நகரில் பருவநிலை மாற்றம் தொடர்பாக உலக தலைவர்கள் மாநாட்டிலும் மோடி கலந்து கொள்கிறார்.

இந்த நிலையில் இத்தாலிய பிரதமர் மரியோ டிராக்கியை பிரதமர் மோடி நேற்று முன்தினம் சந்தித்தார். அப்போது அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் இரு தலைவர்களும் இருதரப்பு உறவுகள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். தனது பயணத்தின் முக்கிய பகுதியாக ரோமில் வாழும் இந்தியா வம்சாவளியினரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். அப்போது அவருக்கு மந்திரங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்தியர்கள் அளித்த வரவேற்பு மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி அவருடன் கலந்துரையாடினார். அப்போது பல்வேறு பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்த அவர் முக்கிய ஆலோசனைகளையும் வழங்கினார். இதைத்தொடர்ந்து வாடிகன் நகருக்கு சென்ற பிரதமர் மோடிக்கு கிறிஸ்தவ மதகுருமார்கள் நேரில் வந்து வரவேற்றனர். பின்னர் போப் ஆண்டவர் பிரான்சிஸ்ஸை மோடி சந்தித்து பேசினார்.

சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின்போது சர்வதேச பயங்கரவாதம் மற்றும் அமைதி குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாக தெரிகிறது. போப் உடனான சந்திப்பு நிறைவு பெற்றதை தொடர்ந்து வாடிகனில் இருந்து புறப்பட்ட மோடியை கிறிஸ்தவ மதகுருமார்கள் அனுப்பிவைத்தனர். இந்த சந்திப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள பிரதமர் மோடி  நடைபெறும் ஜீ-20 அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்று உரையாற்ற்றினார்.

Categories

Tech |