இத்தாலியில் வீசிவரும் அப்பல்லோ புயல் சிசிலியில் கடற்கரையோரப் பகுதிகளை சூறையாடி வருகிறது.
இந்த புயலின் தாக்கம் காரணமாக பலத்த காற்று வீசி வருவதுடன் கனமழையும் பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ளத்தில் குடியிருப்பு பகுதிகளும் மூடி இருப்பதையடுத்து சிக்கி இருப்பவர்களை படகுகள் மூலம் தீயணைப்பு வீரர்கள் மீட்டு வருகின்றனர்.
இந்த வெள்ளத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்டாணியா மற்றும் சிராக்கியூஸ் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசியம் இன்றி வெளியேற வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.