Categories
உலக செய்திகள்

இத்தாலியில் பதவியேற்க போகும் முதல் பெண் பிரதமர்… வெளியான தகவல்…!!!

இத்தாலியில் இன்று நடைபெறும் பொதுத் தேர்தலில் அந்நாட்டு மக்கள் வாக்களித்து வருகின்றனர்.

இத்தாலி நாட்டில் நடைபெறும் பொது தேர்தலில் வலதுசாரி தலைவரான ஜார்ஜியா மெலோனியின் கூட்டணி பெரும்பாலான இடங்களை கைப்பற்றியுள்ளது. இதனை அடுத்து அந்நாட்டின் முதல் பெண் பிரதமராக 45 வயதாகும் மெலோனியின் பதவி ஏற்க இருக்கின்றார். இத்தாலியில் கூட்டணி கட்சிகளில் ஆதரவோடு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமராக நியமிக்கப்பட்ட மரியோ டிராகி கடும் பொருளாதார நெருக்கடி எதிரொலியாக கடந்த ஜூலை மாதம் பதவி விலகினார்.

இதனைத் தொடர்ந்து இத்தாலியில் பொது தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு 600 உறுப்பினர்களைக் கொண்ட இத்தாலி நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இங்கு நாடு முழுவதுமாக அமைக்கப்பட்டிருந்த 60 ஆயிரம் வாக்குச்சாவடியில் மக்கள் ஆர்வத்துடன் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். மாலை வாக்குப்பதிவு நிறைவுற்றதும் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப்பட்ட நிலையில் பிரதன்ஸ் ஆப் இத்தாலி கட்சித் தலைவர் ஜார்ஜியா மெலோனியின் வலதுசாரி கூட்டணி பெரும்பாலான இடங்களில் முன்னிலை பெற்றிருக்கின்றது.

இத்தாலி நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை மற்றும் சேனல் சபைக்கு தேர்தலில் மெலோனியின் பிரதர்ஸ் ஆஃப் இந்தியா கட்சி சுமார் 27 விழுக்காடு வாக்குகளை பெற்று இருக்கின்றது. அவரது வலதுசாரி கூட்டணி மொத்தம் 44% ஆதரவை பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தை என்ட்ரிகோ லிட்டா தலைமையிலான இடதுசாரி கட்சிக் கூட்டணி பிடித்துள்ளது. பெரும்பான்மை இடத்தை பிடித்திருப்பதை அடுத்து ஜார்ஜியா மெலோனி  இத்தாலியின் முதல் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றார். இத்தாலிய அரசியல் சட்டத்தின் படி நாட்டின் அதிபரை பிரதமரை தேர்வு செய்வார் என்பதால் முறையான அறிவிப்பு வெளியாக ஒரு சில நாட்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |