கடும் வெப்பத்தின் காரணமாக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் தற்போது கடுமையான வெப்பநிலை நிலவுகிறது. இதன் காரணமாக இத்தாலி நாட்டில் உள்ள 16 நகரங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இங்குள்ள போலோக்னா மற்றும் ரோம் நகரில் 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், மிலன் நகரில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருப்பதால் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இந்த காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். மேலும் கடும் வெயிலின் காரணமாக பொதுமக்கள் நீச்சல் குளங்கள் மற்றும் கடற்கரைகளை நோக்கி படையெடுக்கின்றனர்.