Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இத்தனை கோடியா?… ஷங்கர்- ராம்சரண் இணையும் படத்தின் பட்ஜெட் குறித்த தகவல்…!!!

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் பல பிரம்மாண்ட படங்களை இயக்கி ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் ஷங்கர். இவர் இயக்கத்தில் வெளியான பெரும்பாலான படங்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. கடைசியாக ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 2.O படம் வெளியாகியிருந்தது. இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன்-2 படம் உருவாகி வந்தது.

Ram Charan to team up with director Shankar for a historical drama? |  Telugu Movie News - Times of India

ஆனால் ஒரு சில காரணங்களால் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது ஷங்கர் பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் பட்ஜெட் ரூ.350 கோடி என தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |