ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 81 இன்னிங்ஸ் மட்டுமே விளையாடி ரோஹித் சர்மா விராட் கோலி ஜோடிகள் 4904 ரன்கள் குவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியில் சச்சின் மற்றும் கங்குலி சேர்ந்து விளையாடுவது தலைசிறந்த ஜோடியாக தெரியும். இவர்கள் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 176 இன்னிங்சில் விளையாடி 8227 ரன்களை குவித்துள்ளார்கள். இதனையடுத்து விராட் கோலி ரோகித் சர்மா ஜோடிகள் 5000 ரன்களை எடுக்க இன்னும் 96 ரன்களே தேவைப்படுகிறது.
இந்நிலையில் நாளை இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்கவிருக்கிறது. இதில் விராட் கோலி ரோகித் சர்மா ஜோடிகள் 5000 ரன்கள் இலக்கை தொடுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இவர்கள் மட்டுமே 81 இன்னிங்ஸில் விளையாடி 4906 ரன்கள் குவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.