Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

இதை வைத்து என்ன செய்ய…! GPay மீது பயனர்கள் கோபம்…. முன்வைக்கும் கோரிக்கை….!!!

நெட் பேங்கிங் மற்றும் UPI (PI) போன்ற அமைப்புகள் மூலம் பணத்தை அனுப்புவது மிகவும் எளிதானது மற்றும் விரைவானது. எனவே, பலர் இந்த வசதியை நம்பியுள்ளனர்.  இதன் மூலமாக எங்கிருந்தாலும் பணப்பரிமாற்றம் செய்து கொள்ள முடியும் என்பதனால் பலரும் தங்களுடைய செல்போன்களில் கூகுள் பே, போன் பே ஆப்களை பதிவிறக்கம் செய்து வைத்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் முன்னணி யுபிஐ செயலியான GPay மீது பயனர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

பண பரிவர்த்தனைக்குப் பிறகு முன்பு கேஷ்பேக் ஆஃபர்களை கூகுள் வழங்கியது. ஆனால் இப்போது அவசியமற்ற கூப்பன்களை வழங்குகிறது. பயனில்லாத இந்த கூப்பன்களை வைத்து என்ன செய்வது என்று பயனர்கள் GPay சமூக வலைதள பக்கங்களில் சாடி வருகின்றனர். மேலும் சிலர் ஸ்கிராட்ச் கார்டுகளை வழங்குவதை நிறுத்துமாறு கோரிக்கை வைக்கின்றனர்.

Categories

Tech |