Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இதை யாரு இங்க கொண்டு போட்டா…. மாவட்ட கலெக்டர் அதிரடி உத்தரவு…. மிரண்டு போன அறநிலையத்துறை….!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கால்வாயில் கிடந்த கோவில் கல் தூண்களை அறநிலையத்துறையினர் மீட்டுள்ளார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம் பஞ்சுபேட்டையில் இருக்கும் மின்வாரியத்திற்கு அருகே ஒரு பெரிய கால்வாய் உள்ளது. இக்கால்வாயில் சுமார் 150க்கும் மேற்பட்ட கோவில் கல் தூண்கள் கிடப்பதை கவனித்த தனிநபர் எவரோ மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பின் மாவட்ட கலெக்டர் அப்பகுதிக்கு விரைந்து சென்று கல் தூண்களை பார்வையிட்டதோடு மட்டுமல்லாமல் தூங்களை அப்புறப்படுத்துமாறு அறநிலையத்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து அறநிலையத்துறையின் சில முக்கிய அதிகாரிகள் 6 முதல் 7 அடி கொண்ட கோவில் கல் தூண்களை கிரேன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தி காஞ்சிபுரம் மாவட்ட கனக துர்க்கை அம்மன் கோவிலில் பத்திரமாக வைத்துள்ளார்கள். மேலும் அந்தக் கல்தூண்கள் அப்பகுதிக்கு எவ்வாறு வந்தது என்று விசாரிக்குமாறு அறநிலையத்துறையினருக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |