Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை போட்டுக்காம வெளியில வராதீங்க..! விதிமுறைகளை மீறியவர்களுக்கு… காவல்துறையினர் அறிவுரை..!!

சிவகங்கை மாவட்டத்தில் காவல்துறையினர் முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து கொண்டே வருகிறது. எனவே சுகாதாரத்துறை மருத்துவர்கள் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் காய்ச்சல் தடுப்பு முகாமை நடத்தி வருகின்றனர். அதேபோன்று சிவகங்கை நகரின் முக்கிய பகுதிகளான அரண்மனை வாசல், மதுரை விலக்கு சாலை, திருப்பத்தூர் சாலை, மதுரை சாலையில் உள்ள சோதனைச் சாவடி ஆகிய பகுதிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் முக கவசம் அணியாமல் செல்லும் நபர்களை தடுத்து நிறுத்தி ரூ.200 அபராதம் விதித்து வருகின்றனர். அது தவிர சமூக இடைவெளியை பின்பற்றி கொரோனா பரவலை கட்டுபடுத்த வேண்டும் என்று பொதுமக்களிடம் அறிவுறுத்தி வருகின்றனர். இது தவிர மாவட்டத்தில் எல்கையான மானாமதுரை, மணலூர், எஸ்.எஸ்.கோட்டை, பூவந்தி, இளையான்குடி, கானாடுகாத்தான் ஆகிய பகுதிகளிலும் காவல்துறையினர் வாகன சோதனை நடத்தி முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

Categories

Tech |