Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இதை பயன்படுத்தக்கூடாது…. அதிகாரிகளின் திடீர் சோதனை…. உரிமையாளர்களுக்கு அபராதம்…!!

விற்பனைக்காக வைத்திருந்த 5 கிலோ பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊட்டி கமர்சியல் சாலையில் இருக்கும் கடைகளில் நகராட்சி நகர் நல அலுவலர் ஸ்ரீதர் மற்றும் சுகாதார அதிகாரிகள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என சோதனை நடத்தியுள்ளனர். அப்போது ஒரு கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை விற்பனைக்கு வைத்திருந்ததை அதிகாரிகள் பார்த்துள்ளனர்.

இதனையடுத்து 5 கிலோ பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் கடை உரிமையாளருக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து உணவு மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை வாகனத்தில் ஏற்றி காலி இடத்தில் கொட்டிய குற்றத்திற்காக ஒரு ஹோட்டல்  உரிமையாளருக்கு அதிகாரிகள் 1000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

Categories

Tech |