பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர்தான் ஆலியாபட். இவர் உட்தா பஞ்சாப், டியர் ஜிந்தகி, கங்கு பாய் ஆகிய பல்வேறு பாலிவுட் திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் ஆவார். கூடியவிரைவில் இவர் “ஹார்ட் ஆஃப் ஸ்டோன்” திரைப்படத்தின் வாயிலாக ஹாலிவுட்டிலும் கால்பதிக்க இருக்கிறார். இப்போது ஆலியாபட் பாலிவுட்டில் அறிமுகமாகி 10 வருடங்கள் நிறைவடைந்து இருக்கிறது.
இதுகுறித்து அவர் தன் சமூகவலைதளப்பக்கத்தில் “நான் மிகவும் நன்றி உள்ளவளாக இருக்கிறேன். தினசரி நான் சிறப்பாக இருப்பேன் என உறுதியளிக்கிறேன்” என பதிவிட்டு உள்ளார். அப்பதிவிற்கு கமெண்ட் செய்திருக்கும் ரன்வீர்சிங், ”உன்னுடைய இப்பயணத்தில் ஒரு சிறு பகுதியாக இருந்தது எனது அதிர்ஷ்டம்” என குறிப்பிட்டுள்ளார். இவருடைய இந்த கமெண்ட்டுக்கு ரசிகர்கள் பல பேர் லைக்செய்து வருகின்றனர்.