திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் உள்ள வியாபாரிகள் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க கோரி கடைகளில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பை தெரிவித்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு ஆகிய தலங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே சுற்றுலா பயணிகளை கொடைக்கானலுக்கு அனுமதிக்ககோரி பல்வேறு சங்கங்களின் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் அரசு உத்தரவுக்கு வியாபாரிகள் பல்வேறு கடைகளின் முன்பாக கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.