Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை நம்பி தான் இருக்காங்க..! அவங்களுக்கு அனுமதி குடுங்க… கிராம மக்கள் கோரிக்கை..!!

ஊரக வளர்ச்சித்துறை 100 நாள் வேலை திட்டத்தில் உள்ள அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று சிவகங்கை கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் மேற்கொள்ள வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் வியாதியஸ்தர்கள் மற்றும் 55 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களை வேலையில் ஈடுபடுத்த வேண்டாம், இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருப்பவர்களையும் ஈடுப்படுத்த வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக இடைவெளியை பின்பற்றி அனைவரும் 100 நாள் பணியை செய்ய வேண்டும் பணி செய்ய வருபவர்களுக்கு கைகழுவ வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என்ற 13 விதிமுறைகளை பின்பற்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த வேலையின் மூலம் ஏற்கனவே வெளியூர் சென்று வேலை செய்ய இயலாத முதியவர்கள் கிடைக்கும் வருவாயைக் கொண்டு தங்களுடைய ஜீவனாம்சத்தை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் அவர்களை கொரோனா விதிமுறையை பின்பற்றி 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்ய அனுமதிக்க வேண்டுமென்று சிவகங்கையை சுற்றியுள்ள கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |