Categories
லைப் ஸ்டைல்

இதை தினமும் ஒன்று சாப்பிட்டால் மட்டும் போதும்… எல்லாப் பிரச்சனைக்கும் ஒரே தீர்வு…!!!

உங்கள் உடலில் உள்ள அத்தனை பிரச்சினைகளுக்கும் தீர்வு காண தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் மட்டுமே போதும்.

வாழைப்பழத்தில் எண்ணற்ற வகைகள் உள்ளன. செவ்வாழை, ரஸ்தாளி, கற்பூரவள்ளி, பூவன் பழம், மலை (பச்சைப்பழம்), மலைப்பழம், பேயன் பழம், மொந்தம் பழம், மட்டி பழம், ஏலக்கி போன்ற வகைகளில் வாழைப்பழம் இருக்கிறது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி-6, வைட்டமின் சி, மக்னீசியம், நார்ச்சத்துக்கள் ஆகியவை நிறைந்துள்ளன.

செவ்வாழை: பீட்டா கரோட்டீன், பொட்டாசியம், வைட்டமின்-சி, ஆன்டி ஆக்ஸிடென்ட், நார்ச்சத்து போன்றவை இருக்கிறது. சொரி, சிரங்கு, தோல் வெடிப்பு போன்ற சரும நோய்களுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணத்தைத் தருகிறது. தொற்றுநோய் கிருமிகளை கொல்லும் ஆற்றலை கொண்டது. சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதைத் தடுக்கிறது. மலச்சிக்கலை குணப்படுத்துகிறது.

மாலைக்கண் நோய், கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். இதை தினம் ஒன்று சாப்பிட பார்வை தெளிவாகும். மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு உணவுக்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.

மேலும் பல் வலி, பல்லசைவு போன்ற பல் சார்ந்த பிரச்னைகளை, செவ்வாழைப்பழம் குணமாக்கும். நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடும் ஏற்படும். எனவே, இப்பாதிப்பு உள்ளவர்கள் தொடர்ந்து, 40 நாட்கள் செவ்வாழைபழம் சாப்பிட்டு வர, நரம்பு தளர்ச்சி குணமடையும். ஆண்மையும் பெருகும்.

ரஸ்தாளி : பொட்டாசியம், சோடியம், வைட்டமின் பி – 6, மற்றும் நார்ச்சத்துக்கள் அடங்கியது. உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. உடல் சோர்வு நீங்கும். தினமும் இரவு 1 ரஸ்தாளி உட்கொண்டால் தூக்கமின்மை பிரச்னை சரியாகும். அத்தோடு மன அழுத்தமும் குறையும். உடலின் ஜீரண சக்தியை அதிகரிக்க செய்கிறது.

கற்பூரவள்ளி : நரம்புகளுக்கு வலு தரும். இதில், செரட்டோனின், நார் எபினெஃப்ரின் சத்துக்கள் உள்ளன. இது வேறு எந்தப்பழத்திலும் காணப்படுவதில்லை. இது உடலுக்கு தேவையான ஜீரன சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. உடல் சூட்டைத் தணிக்க வல்லது. உடலுக்கு உடனடி எனர்ஜி டானிக்காக விளங்குகிறது. உடல் எடையைக் குறைக்கவும் உதவும்.

பூவன் பழம் : மூல நோய்களுக்கு உகந்தது. ஆர்த்ரைட்டிஸ் உள்ளவர்களுக்கு பலன் தரக்கூடியது. பித்தம் உள்ளவர்கள் உட்கொள்வதும் நல்லது.

பச்சைப்பழம் : நார்ச்சத்து, வைட்டமின், மினரல் போன்றவை உள்ளது. பொதுவாக, எல்லோரும் பச்சைப்பழத்தை உண்ணலாம். பச்சைப்பழம் குடல் புண்களை ஆற்றும் தன்மை கொண்டது. இதயத்துக்கு வலு கூட்டுகிறது. மேலும், உடல் எடையை குறைக்கச் செய்கிறது. உடல் குளி்ர்ச்சியை உண்டாக்கும்,
பித்த நோய் குணமாகும்.

நேந்திர பழம் : அதிகமான பொட்டாசியம் இந்த பழத்தில் இருப்பதால் இந்த பழம் தினமும் காலை உணவுக்கு பின் எடுத்துக் கொண்டால் இதயத்துக்கு நல்லது. இதயத் துடிப்புக்கும் நல்லது. கெட்ட கொழுப்பை குறைக்கும். மலச்சிக்கலை கட்டுப்படுத்தி செரிமானத்தை அதிகரிக்கும். நல்ல தூக்கத்தை கொடுக்கும்.

மொந்தன் பழம் :இது மூலம் மற்றும் அனீமியாவுக்கு நல்லது. குடல் புண்களை கட்டுப்படுத்தும். மாதவிடாய்க்கு நல்லது. அல்சர் நோயாளிகள் தொடர்ந்து சாப்பிடலாம்.

ஏலக்கி : இதில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது, இது தசைக்கு நல்லது, மலச்சிக்கலுக்கு சிறந்த மருந்து.

பேயன் பழம் :புகைப்பிடிப்பதை நிறுத்த உதவியாக இருக்கிறது. இதில் உள்ள Tryptophan என்னும் அமினோ அமிலம் மூளையில் உற்பத்தியாகும் செரோட்டினின் அளவை அதிகரிக்கச் செய்யும். மன அழுத்தத்தைப் போக்கி புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ள உதவியாக இருக்கும்.

யாரெல்லாம் வாழைப்பழம் சாப்பிட கூடாதுனு தெரிஞ்சிக்கோங்க,

வாழைப்பழம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகமாக்கும் தன்மை கொண்டது. எனவே, தேவையான அளவு எடுத்துக் கொண்டால் நல்லது. அனைவரும் ஒரு நாளைக்கு 1 அல்லது 2 வாழைப்பழங்கள் உட்கொள்ளலாம். நீரிழிவு நோயாளிகள் வாழைப்பழம் அதிகம் சாப்பிடக் கூடாது. சாப்பிடுவதற்கான சரியான நேரம், வெறும் வெயிற்றில் காலையில் வாழைப்பழம் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். வெறும் வயிற்றில் வாழைப்பழம் உட்கொண்டால் அசிடிட்டி உண்டாகும். அதோடு, அடுத்தடுத்து உணவுகளை எடுத்துக் கொள்வதிலும் சிக்கல் ஏற்படும். அதனால் மதியம் அல்லது இரவு நேரங்களில் எடுத்துக் கொள்ளலாம்.

Categories

Tech |