நாளை புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து புதுச்சேரி மாநிலத்தில் அசம்பாவிதங்களை தடுப்பதற்காக சட்டமன்ற தேர்தலையொட்டி 7ஆம் தேதி காலை 7 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விளக்கமளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து இதுகுறித்து விளக்கம் அளித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “144 தடை உத்தரவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாது. நாளை வாக்குப் பதிவின்போது சட்டவிரோதமாக ஆட்கள் கூடுவதை தடுக்கவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.