முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி அவர்கள் அமீர்கான் பட வாய்ப்பை இழந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
“பாரஸ்ட் கம்ப்” திரைப்படம் ஹாலிவுட்டில் பிரபலமானது. இப்படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றது. இந்த படத்திற்கு “லால் சிங் சட்டா” என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் அமீர்கான் நடிக்கிறார்.இந்த படத்தில் எப்போதும் போல தொன தொன என்று பேசிக் கொண்டே இருக்கும் கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதியை நடிக்கவைக்க அமீர்கான் முடிவுசெய்துள்ளார்.
ஆனால் விஜய் சேதுபதி உடல் எடையை குறைக்க தவறியதால் அப்படத்தில் விஜய்சேதுபதிக்கு பதிலாக வேறு ஒருவரை நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அபடத்தில் நடிக்க ஒரு இந்தி நடிகரை தேர்வு செய்துவிட்டார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது .