சட்டப்பேரவையில் கோரிக்கை மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் போதைப்பொருள் தடுப்பு குறித்து பாமக உறுப்பினர் ஜி.கே மணி கேள்வி எழுப்பினார். போது கேள்வி நேரத்தில் குறுக்கிட்டு பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின் பள்ளி, கல்லூரிகள் அருகே போதைப்பொருளை விற்பனை செய்பவர்களுக்கு கடும் தண்டனை வழங்கும் வகையில் புதிய சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப் பேரவையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு கேள்வி நேரத்தில் முதல்வர் பதிலளித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் முதல்வர் சார்ந்த துறைகள் கேள்வி நேரத்தில் இடம்பெற்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.