தமிழக ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சீனி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்களும் இதை வாங்கி பயனடைந்து வருகின்றனர். இதற்கிடையில் ஒரு சில ரேஷன் கடைகளில் வேலை செய்யும் ஊழியர்கள் ரேஷன் அரிசிகளை கடத்துவதாக புகார் எழுந்து வருகிறது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
தமிழகத்தில் ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட ரேசன் கடை பணியாளர்களை உடனுக்குடன் இடைநீக்கம் செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனுப்பிய சுற்றறிக்கையில், ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபடும் பணியாளர்கள் நிரந்தர பணிநீக்கம் செய்யப்படுவதை கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.