Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இதை சரியா செய்யலைன்னா கண்டிப்பா வந்துரும்…. மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா…. சுகாதார துறை அதிகாரிகளின் எச்சரிக்கை…!!

மதுரையில் கொரோனாவால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 100 ஐ கடந்த நிலையில் புதிதாக 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்று மெதுவாக குறைய தொடங்கிய நிலையில் தற்போது மீண்டும் பெருக்கெடுக்க ஆரம்பித்திருக்கிறது. அந்த வகையில் நேற்று மதுரை மாவட்டத்தில் புதிதாக 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் 21,446 என்ற கணக்கில் அதிகரித்துள்ளது. மேலும் 8 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்கள். இதனால் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 20,874 ஆக உயர்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தொற்று குறையத் தொடங்கிய காலகட்டத்தில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 100க்கும் குறைவாக இருந்தது. ஆனால் தற்போது 100 ஐ கடந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டியில் தான் கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது தொற்று அதிகரித்து வருவதால் கூடுதலாக படுக்கைகள் ஒதுக்கப்பட வேண்டியதிருக்கிறது. இத்தொற்றின் பரவலை குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, பொதுமக்கள் கொரோனாவிற்கான நடவடிக்கைகளை முறையாக கையாளவிட்டால் தமிழகத்தில் தொற்றின் இரண்டாம் அலை பரவ தொடங்கும் என்று கூறியுள்ளார்கள்.

Categories

Tech |