Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இதை கண்டிப்பா போடணும்… விதிமுறைகளை மீறினால் அவ்வளவுதான்…. எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்….!!

காஞ்சிபுரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு ரூபாய் 10,000 வசூலிக்கப்பட்டது.

கொரோனாவின் கோரத்தாண்டவம் மெதுமெதுவாக குறையத் தொடங்கிய சூழலில் தற்போது மீண்டும் உருவெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனால் தமிழக அரசு கொரோனா விதிமுறைகளையும் நடவடிக்கைகளையும் குறிப்பாக முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க உத்தரவிட்டிருக்கிறது. இந்நிலையில் அனைத்து பகுதிகளிலும் அதிகாரிகள் திடீர் ஆய்வில் ஈடுபடுகின்றனர்.

அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டதிலுள்ள குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் வட்டார அலுவலர் வேல்முருகன் தலைமையிலான அதிகாரிகள் அங்கிருக்கும் கடைகள், நிறுவனங்கள் ஆகியவற்றில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக கையாளப்படுகிறது என்று காணும் விதத்தில் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஊழியராக பணிபுரிந்து வந்த சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் முகக் கவசம் அணியாமல் இருந்ததால் ஒவ்வொருவருக்கும் ரூபாய் 200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டு மொத்தமாக ரூபாய் 10,000 வசூலிக்கப்பட்டது. மேலும் அதிகாரிகள் முகக் கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |