இலங்கையில் அரசு பிரதிநிதிகள் அனைத்து தரப்பினருடன் ஒத்துழைக்க வேண்டும் என அமெரிக்க தூதர் ஜூலி சங் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை நாட்டில் உள்ள அரசு பிரதிநிதிகள் அனைத்து தரப்பினருடன் ஒத்துழைக்க வேண்டும் என இலங்கைக்காக அமெரிக்க தூதர் ஜூலி சங் வலியுறுத்தியுள்ளார். கோத்தபய ராஜபக்சே வெளியேறியதை சுட்டிக்காட்டி டுவிட்டர் பக்கத்தில் அமெரிக்கத் தூதர் ஜூலி சங் கூறியதாவது,
“சட்டத்தின் ஆட்சியை பாதுகாப்பதில் இனிவரும் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்த வேண்டும். பொருளாதார பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை மக்களின் ஜனநாயக விருப்பங்களுக்கு அமெரிக்கா துணை நிற்கும்” என்று அவர் கூறியுள்ளார்.