சட்டப்பேரவையில் இன்று தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றுள்ளது. இதில் எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். அப்போது தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் இபிஎஸ்க்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றுள்ளது. அதில் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டில் கூட்டு பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
அதற்கு முதல்வர் முக ஸ்டாலின் பொள்ளாச்சி பாலியல் சம்பவமே உங்கள் ஆட்சியில்தான் நடைபெற்றது என கூறியுள்ளார். இந்நிலையில் ஈபிஎஸ் பொள்ளாச்சி சம்பவம் எல்லாம் முடிந்துவிட்டது. பொள்ளாச்சி ஜெயராமனை மக்களே வெற்றி பெற வைத்திருக்கின்றனர். மேலும் தமிழ்நாட்டில் பள்ளி மற்றும் கல்லூரிகள் கஞ்சா அமோகமாக பயன்படுத்தப்படுகிறது என தெரிவித்துள்ளார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் கஞ்சா வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டு குற்றம் புரிந்தவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
மேலும் உங்கள் ஆட்சியை விட அதிக அளவில் கஞ்சா பறிமுதல் செய்து இருக்கின்றோம். காவல்துறையினர் அமைச்சர் மீது சிபிஐ விசாரணை முடிவடையும் தருவாயில் இருக்கின்றது என தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி போதை பொருள் எங்கள் ஆட்சியில் வந்ததைப் போன்று கூறுகின்றீர்கள். போதை பொருள் தடுப்பு சட்டம் அப்போது இருந்திருக்கின்றது. நான் நடப்பவற்றை தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் கூறுங்கள். நாங்கள் கேட்கின்றோம். ஆனால் ஆதாரத்தோடு கூறுங்கள் வாட்ஸ்அப் தகவல்களை இங்கே கூறாதீர்கள் என தெரிவித்துள்ளார். இவ்வாறாக முதலமைச்சருக்கும். எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையேயான நேரடியாக காரசார விவாதம் நடைபெற்றுள்ளது.