Categories
தேசிய செய்திகள்

இதை எங்கள் லைப்பில் மறக்கவே முடியாது…. மாணவிகளின் கனவை நிறைவேற்றிய ராகுல் காந்தி…. என்னனு நீங்களே பாருங்க….!!!!

மாணவிகளின் கனவை ராகுல் காந்தி நிறைவேற்றி வைத்துள்ளார்.

கன்னியாகுமரியில் இருந்து ராகுல் காந்தி தலைமையில் இந்திய ஒற்றுமைக்கான நடைப்பயணம் தொடங்கப்பட்டது. கடந்த வாரம்  இந்த நடைப்பயணத்தை  மத்திய பிரதேசத்தில் மேற்கொண்டனர். அப்போது அவரை  லகானியா, கிரிஜா உள்ளிட்ட 3  மாணவிகள் சந்தித்துள்ளனர்.அவர்கள் தங்களுக்கு ஹெலிகாப்டரில் போக  ஆசையாக இருப்பதாக  கூறியுள்ளனர். இதனை கேட்டு அவர் மாணவிகளின்  விருப்பத்தை நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளார்.

அதேபோல் கடந்த 8-ஆம்  தேதி ராஜஸ்தானில் உள்ள பண்டி பகுதியில் இருந்து மாணவிகளுடன் ஹெலிகாப்டரில் மாதோபூருக்கு சென்றார். அப்போது மாணவிகளுக்கு ஹெலிகாப்டரின் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் கொடுத்துள்ளனர். மேலும் இதுகுறித்து அந்த மாணவிகள் கூறியிருந்ததாவது, “நாங்கள் எங்கள் வாழ்க்கையில் முதல்முறையாக ஹெலிகாப்டரில் பயணித்துள்ளோம். இது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் எங்களிடம் அவர்  உங்கள் குடும்பம், சமுதாயத்தை பார்க்காமல் என்ன  படிக்க விருப்பமோ அந்த துறையை தேர்வு செய்யுங்கள்” என கூறினார் என மாணவிகள் கூறியுள்ளனர்.

Categories

Tech |