Categories
மாநில செய்திகள்

இதை உடனே செஞ்சிடுங்க….! TNPSC குரூப் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு…. தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு…!!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான முதல் கட்ட தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக முதன்மை தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வானது பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெறவுள்ளது. எனவே முதன்மை எழுத்து தேர்வுக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் தேர்வு கட்டணமாக 200 ரூபாயை செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர்கள் வரும் 17ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை தங்களுடைய ஒரிஜினல் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அவ்வாறு தேர்ச்சி பெற்றவர்கள் தங்களுடைய ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வில்லை என்றால், அவர்களுக்கு விருப்பம் இல்லை என்று அவர்களுடைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுடைய விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது எனவும் டிஎன்பிஎஸ்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |