பிரபல நாட்டில் ஓய்வு பெறும் வயதை மூன்று ஆண்டுகள் உயர்த்த முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி கூறியுள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் 2 தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் இளைய தலைமுறை என்பதை நீண்ட காலம் வேலை செய்ய ஊக்குவிப்பதற்காக ஓய்வூதிய சீர்திருத்தங்களை தொடர உறுதியளித்தார். இது ஓய்வூதிய வயதை படிப்படியாக 65 -ஆக உயர்த்தும். இருப்பினும் தொழிற்சங்கங்களுடன் ஓய்வு பெறும் வயது குறித்து விவாதிக்கவும், திருத்தமும் தயாராக இருப்பதாக அவர் அறிவித்தார். மேலும் இந்த மாற்றங்களின் படி போதுமான ஆண்டுகள் பணிபுரியும் நபர்கள் இத்தகைய நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். தங்கள் குழந்தைகளை வளர்ப்பதற்காக வேலைக்கு விடுப்பு எடுத்து கொள்ளும் பல பெண்கள் போல தேவைகளை பூர்த்தி செய்யாதவர்கள் தற்போது 67 வயது வரை வேலை செய்ய வேண்டும்.
மேலும் பிரஞ்சு தொழிலாளர்கள் அனைவரும் அரசு ஓய்வூதியத்திற்கு தகுதியானவர்கள். இந்த சீர்திருத்தங்கள் செய்யப்படாவிட்டால் அரசாங்கம் ஓய்வூதிய பலனை குறைக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். ஆனால் பெரும்பான்மையான எதிர்க்கட்சி மற்றும் தொழிலாளர் அமைப்புகள் ஓய்வூதிய மாற்றத்திற்கு எதிராக உள்ளது.