கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். மேலும் முக கவசம் அணிவது செல்ல வேண்டும். மத்திய அரசு அவ்வப்போது வழங்கும் அறிவுரைகளுக்கு ஏற்ப தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை தொழிற்சாலை நிர்வாகம் செய்ய வேண்டும். தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் இந்த நடைமுறை விதிகளைகளை பின்பற்றவில்லை என்றால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கு இ-பாஸ் முறை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். கண்காணிப்பு குழுக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கடைப்பிடித்து வருவது குறித்து கண்காணிக்க அமைக்கப்படும். உள்ளாட்சி அமைப்புகள், காவல் துறை, சுகாதாரத் துறை பணியாளர்கள் கொண்டு நோய் கட்டுப்பாடு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அப்பகுதியிலிருந்து வெளியில் வராத வகையில் 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.