பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகாவில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் தாலுகாவில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் மாவட்ட நிர்வாகம் கொரோனா பரவலை தடுக்க அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
குன்னம் தாலுகா பகுதியில் சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணியாமல் கொரோனா விதிமுறைகளை மீறி செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த மாதம் 8-ஆம் தேதி முதல் இந்த மாதம் 14-ஆம் தேதி வரை 64 பேருக்கு ரூ. 14 ஆயிரத்து 90 விதிமுறைகளை மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.