ஆய்வு பணி மேற்கொண்டு இருந்த ஐக்கிய நாடுகளின் ஹெலிகாப்டரை போராளிகள் குழுவினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
காங்கோ நாட்டு ராணுவத்தினருக்கும் மார்ச் 23 இயக்க போராளிகளுக்கும் இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வடக்கு கிவ் மாகாணத்தில் வைத்து கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலினால் ஏராளமான மக்கள் அங்கிருந்து வெளியேறி உள்ளனர். இதனை அடுத்து மோதல் ஏற்பட்ட இடங்களில் ஐக்கிய நாடுகளின் ஹெலிகாப்டர் ஆய்வு பணி நடத்திக் கொண்டிருந்தது. அந்த சமயத்தில் மார்ச் 23 இயக்கத்தினர் ஐக்கிய நாடுகளின் ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியுள்ளனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த 6 வீரர்களும் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 8 வீரர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.