மீன் பிடிப்பதற்காக வெடி மருந்து வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள சமயசங்கிலி நீர்மின் நிலையம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் அவர் ஆவத்திபாளையத்தை சேர்ந்த ராஜசேகர் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் வைத்திருந்த பையில் மீன் பிடிப்பதற்காக சட்ட விரோதமாக தயாரித்த வெடிமருந்து இருப்பதை கண்டறிந்துள்ளனர். அதனை பறிமுதல் செய்த காவல்துறையினர் ராஜசேகரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.