Categories
சினிமா தமிழ் சினிமா

இதெல்லாம் நினைச்சி நான் பெருமைப்படுவேன்!…. நடிகர் விக்ரம் வெளியிட்ட பதிவு….!!!!

இயக்குனர் மணிரத்னம் இயக்கிய  பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கின்றனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருக்கிறார். 2 பாகங்களாக உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் முதல் பாகம் நேற்று முன்தினம் உலகம் முழுதும் வெளியாகி இருக்கிறது.

பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலனாக வரும் விக்ரம், படத்தின் மிக சரியான தேர்வு எனவும் தன் திறமையான நடிப்பால் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார் எனவும் ரசிகர்கள் பலரும் அவர்களின் விமர்சனங்களை தெரிவித்தனர். இந்த நிலையில் நடிகர் விக்ரம் தன் சமூகவலைத்தளப் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.

அவற்றில் ”நன்றி, தேங்க்ஸ், சுக்ரியா, நன்னி, தன்யவாத் இப்படி எந்த மொழியில் கூறினாலும், கேட்பதற்கும் உணர்வதற்கும் நன்றாக இருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு ஆதித்தகரிகலானுக்கு கிடைத்த அந்த ஆக்ரோஷமான பின்னூட்டம் ரொம்ப நன்றி. நான் பல படங்களில் நடித்து இருக்கேன். அத்துடன் பல நல்ல கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன்.

அனைத்து திரைப்படங்களையும் எனது படம், என்னுடைய கதாபாத்திரம் என்று பெருமைப்படுவேன். மேலும் அனைவரும் இது எங்களுடைய படம் என கொண்டாடுவது எனக்கு பெரிய மகிழ்ச்சி. அதுமட்டுமின்றி படக்குழு உள்ளிட்டவர்களுக்கும் இயக்குநர் மணிரத்னத்துக்கும் நன்றி” என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |