வலிமை பட வில்லன் கார்த்திகேயா கனவில் கூட நினைக்காதது நடந்துவிட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அஜித் நடித்து வினோத் இயக்கிய வலிமை திரைப்படம் வரும் 13 ஆம் தேதி வெளிவர இருக்கிறது. மேலும் இந்த திரைப்படம் தமிழ் தவிர தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் வெளியிடப்பட இருக்கிறது. வலிமை படத்தின் போஸ்டரை நாகார்ஜுனா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து வலிமை படத்தில் வில்லனாக நடித்த கார்த்திகேயா அஜீத் குமாருடன் இருக்கும் படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அஜித் படங்களை சிறிய வயதில் இருந்தே பார்த்து வருகிறேன். அவருடன் போஸ்டரில் ஒன்றாக இருப்பேன் என கனவில் கூட நினைத்துப் பார்க்க வில்லை என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.