Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதெல்லாம் தேவையா…? இன்ஸ்டா மூலம் கள்ளக்காதல்…. குழந்தைகளுக்கு நடந்த கொடுமை….!!

கள்ளக்காதலனை பார்க்க  சென்ற பெண்ணின் குழந்தைகள் கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பகுதியிலுள்ள ஆர்.எஸ். காலனியில் கணவன், மனைவி  என தம்பதிகள் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகனும், 5 வயதான ஒரு மகளும் இருக்கின்றனர் . 30வயதான இந்த  குழந்தைகளின் தாய்க்கு  இன்ஸ்டாகிராம் மூலமாக மகாராஷ்டிரா மாநிலத்தை  சேர்ந்த  ஹபிபுல்லா என்பவருடன் பழக்கம்  ஆகியுள்ளார்.

அதிக நேரம் செல்போனில் பேசிவந்த இவர்களின் நட்பு ஒருகட்டத்தில் கள்ளக்காதலாக  மாறியுள்ளது . இதனிடையே இளைஞர் அவரது ஊரான புனேவுக்கு வரும்படி இளம்பெண்ணிடம் கூறியதால் 2 குழந்தைகளையும்   அழைத்து கொண்டு அந்தப்பெண்  புனேவுக்கு  சென்றுள்ளார்  . ஆனால் அங்கு அந்த நபர் குழந்தைகளை கொடுமை படுத்தியுள்ளார்.

அதனை தாங்க முடியாமல் அவர்கள் வேறு ஒருவர் உதவியுடன் தனது தந்தையை தொடர்புகொண்டு நடந்தவற்றை கூறியுள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த தந்தை காவல் நிலையத்தில் புகார் அளிக்க புனேவுக்கு விரைந்த போலீசார் இளம் பெண்ணையும் 2 குழந்தைகளையும் மீட்டுள்ளனர். மேலும் குழந்தைகளை கொடுமைப்படுத்திய ஹபிபுல்லாவை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |