ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் மாவட்ட கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தில் வைத்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் மாவட்ட கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் வசந்தன், மாவட்ட செயலாளர் செந்தில், மாவட்ட துணைத்தலைவர் வாசுதேவன், மாவட்ட இணை செயலாளர் தமிழ்செல்வம், மாநிலத் தலைவர் ரமேஷ், மாநில பொருளாளர் விஜயபாஸ்கர், மாநில செயலாளர் சவுந்தரிய பாண்டியன், முன்னாள் மாநில துணை தலைவர் புஷ்பநாதன், மாவட்ட பொருளாளர் சிவகுமார், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முருகையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் 100 நாள் வேலைத்திட்ட கணினி உதவியாளர்களுக்கு இளநிலை உதவியாளர்களுக்கு இணையாக ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும். முழு சுகாதாரம் , மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு காலமுறை ஊதியம், பணி வரன்முறை செய்ய வேண்டும், கிராம ஊராட்சி செயலர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.