Categories
அரசியல்

இதெல்லாம் சகஜமப்பா…. பொறுத்திருங்க நிச்சயம் வெற்றி வரும்…. தேமுதிக தலைவர்…!!

தமிழகத்தில் நடந்து முடிந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. ஆனால் அதிமுக பெரும் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் மூன்றாவது கட்சியாக உள்ள மக்கள் நீதி மையம், நாம் தமிழர் கட்சி, தேமுதிக சொல்லும் அளவிற்கு வெற்றி பெறவில்லை. அதேபோல பாஜகவும் பின்னடைவை சந்தித்துள்ளது. ஆனால் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக சுயேச்சையாக போட்டியிட்ட 169 வேட்பாளர்களின் 110 பேர் வார்டு உறுப்பினராக வெற்றி பெற்றிருப்பது அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் தோல்வி குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம். உழைப்பை மட்டும் நம்பி நாம் தேர்தலை எதிர்கொண்டோம். நமக்கான வெற்றி நிச்சயம் வரும். அதுவரை தொண்டர்கள் துவண்டுவிடாமல் வெற்றியை நோக்கி பாடுபட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |