பிரபல நடிகை நிதி அகர்வால் மதுபான விளம்பரத்தில் நடித்து விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.
நடிகை நிதி அகர்வால் தமிழில் ஈஸ்வரன், பூமி ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது உதயநிதி ஜோடியாக நடித்து ஒரு படம் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மதுபானத்தை திறந்து ஊற்றுவது போலவும் அதனை முகர்ந்து பார்ப்பது போலவும் இதனை பருகினால் நன்றாக இருக்கும் என பேசுவது போலவும் வீடியோ வெளியாகி இருக்கிறது.
இந்த வீடியோ பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும் இதில் இந்தியாவின் சிறந்த பிராந்தியான மார்பியஸ் ஒரு மாஸ்டர் பீஸ் அழகிய கோப்பையுடன் வருகிறது. இதன் மூலம் ஒவ்வொரு சிப்பையும் நீங்கள் அழகாக பருகலாம் என கூறியுள்ள வசனங்கள் இடம் பெற்றுள்ளன. இதனால் நிதி அகர்வால் இளைஞர்களை மது அருந்த தூண்டுவதாக இவர் மீது கண்டனங்கள் எழுந்துள்ளன.