ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் வில் ஸ்மித் கிரிஸ் ராக்கை மேடையில் வைத்து ‘பளார்’ என்று அறைந்து விட்டு ஆஸ்கார் விருதை வாங்கிச் சென்றார். இந்த வீடியோ சோசியல் மீடியாக்களில் வைரலாக பரவியது இந்த சம்பவம் குறித்து வெங்கட் பிரபு ட்விட் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் ஸ்மித், 2018 ம் ஆண்டு Alopecia என்ற நோயால் பாதிக்கப்பட்டு தனது தலைமுடிகளை இழந்துள்ளார்.
ஆனால் இதனை அவர் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் தான் மொட்டை தலையுடன் இருக்கும் புகைப்படத்தை சோசியல் மீடியாக்களில் வெளியீட்டு தன்னுடைய தன்னம்பிக்கையை மக்களுக்கு தெரிய வைத்துள்ளார். இதனை கேலி செய்யும் விதமாக கிரிஸ் பேசியதாலேயே ஸ்மித் அவரை அறைந்துள்ளார். ஆனால் சில ஊடகங்கள் வேடிக்கையாக பேசியதற்கு இவ்வாறு அடித்திருக்க வேண்டாமென கூறிவருகின்றன. இது உங்களுக்கு நகைச்சுவையா.? ஒருவரின் உடல் ஊனத்தை நோயால் பாதிக்கப்பட்டு தன்னுடைய முடிகளை இழந்து ஆயினும் தன்னுடைய தன்னம்பிக்கையை இழக்காமல் உள்ளவரை அவமானப்படுத்துவது உங்களுக்கு நகைச்சுவையா.?
இதில் ஜோக் செய்வதற்கு என்ன இருக்கிறது.? ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் ஒருவரின் தனிப்பட்ட விஷயங்களை அவருடைய மனைவி பற்றி பேசுவது தேவையில்லாத ஒரு விஷயம் என்று மிகக் கடுமையாகப் வித் செய்துள்ளார். இதற்கு பலரும் தங்களுடைய ஆதரவை தெரிவித்துள்ளனர்.