சாலைகளில் விபத்து ஏற்படாமல் தடுப்பதற்கு காவல்துறை சார்பாக வாகன ஓட்டிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் பல்வேறு நடவடிக்கைகளையும் காவல்துறை எடுத்து வருகிறது. அந்த வகையில் வாகனம் ஓட்டும் பொழுது ஹெல்மெட் கட்டாயம், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது உள்ளிட்ட பல்வேறு சாலை விதிமுறைகளை போக்குவரத்து காவல்துறை பிறப்பித்து இருக்கிறது.
இந்த நிலையில் டூவிலர், கார் உள்ளிட்ட வாகனங்களில் ஓட்டுநர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால், அவருடன் பயணிக்கும் மது அருந்தாத நபர்களுக்கும் 1000 – 10000 வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. அதேசமயம், அறிமுகமில்லாத ஓட்டுநர்களுடன் பயணிக்கும்போது இந்த விதிமுறை பின்பற்றப்படமாட்டாது எனவும் தெரிவித்துள்ளது. சென்னையில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய விதி, விரைவில் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படும் என தெரிகிறது.