உலக அளவில் ஏராளமான பயனாளர்களை வாட்ஸ்அப் கொண்டுள்ளது. அபபோது பயனர்களை கவரும் வகையில் புதிய அப்டேட்களை வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அவ்வகையில் எவ்வித அறிவிப்பும் இல்லாமல் வாட்ஸ்அப் குழுவில் இருந்து வெளியேறும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தற்போது கூறியுள்ளது. நாம் பொதுவாக ஒரு குழுவில் இருந்து வெளியேறும் போது, யார் அந்த குழுவில் இருந்து வெளியேறினார் என்ற அறிவிப்பு அதில் வரும்.
ஆனால் இனி வரக்கூடிய நாட்களில் குழுவிலிருந்து யார் வெளியேறினாலும் அதன் அட்மிட் மட்டுமே தெரிந்து கொள்ளும்படி புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்த அறிவிப்பை வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. எனவே இந்த அப்டேட் விரைவில் வாட்ஸ் அப்பில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.