Categories
சினிமா தமிழ் சினிமா

இது வேற லெவல்!‌… “செருப்பைக் காட்டிய மகா” உருகி உருகி ப்ரபோஸ் செய்யும் ரவீந்தர்….. வைரலாகும் வீடியோ….!!!!!

சன் மியூசிக் தொலைக்காட்சியில் விஜேவாக அறிமுகமான மகாலட்சுமி தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் லிப்ரா ப்ரோடக்ஷன் தயாரிப்பாளர் ரவீந்தரை கடந்த 1-ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் திருப்பதியில் உறவினர்கள் முன்னிலையில் எளிமையாக நடைபெற்றது. மகாலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகன் இருக்கும் நிலையில், ரவீந்தரை 2-தாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இதேபோன்று ரவீந்தருக்கும் 2-வது திருமணம் தான். அதன்பிறகு மகாலட்சுமி மற்றும் ரவீந்தருக்கு திருமணம் ஆகி கிட்டத்தட்ட 1 மாதம் ஆகும் நிலையில், சமூக வலைதளங்களில் இருவரின் திருமணம்தான் தற்போது வரை ஹாட் டாப்பிக்காக இருக்கிறது.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படும் ரவி-மகா ஜோடியை வைத்து பிரபல விஜய் தொலைக்காட்சி வந்தால் மகாலட்சுமி என்ற நிகழ்ச்சியை தற்போது எடுத்துள்ளது. இது தொடர்பான ப்ரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை ஈரோடு மகேஷ் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோவில் இருவரில் யார் அதிக முறை ஐ லவ் யூ சொன்னார்கள் என்று கேட்கப்படுகிறது. அதற்கு மகாலட்சுமி கையில் செருப்பை எடுத்து நான் தான் அதிக முறை சொல்லி இருக்கிறேன் அவர் கூற மாட்டார் என்கிறார்.

ஆனால் ரவீந்தர் நான் தான் பலமுறை ஐ லவ் யூ சொல்லி இருக்கிறேன் என்கிறார். இதனையடுத்து ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் மாறி மாறி ப்ரபோஸ் செய்து உருகுகின்றனர். மேலும் ரவீந்தர்-மகாலட்சுமியை மல்லிகை பூ என்றெல்லாம் கூறி பிரமாதமாக கவிதை வடிவில் வர்ணிக்கிறார். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் செம டிரெண்டிங் ஆக இருக்கிறது. இந்த நிகழ்ச்சி வருகிற ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்.

https://www.instagram.com/p/CjFKSoVoQxt/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

Categories

Tech |