பிரபல நாட்டில் மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளது.
சீனாவில் கடந்த 2019-ஆம் ஆண்டு உலகில் முதல் முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதனை கட்டுப்படுத்துவதற்காக மாடர்னா, சைபர் என்ற 2 சர்வதேச தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தடுப்பூசியை உலகம் முழுவதும் பல நாடுகள் பயன்படுத்தி கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டது. ஆனால் சீனா இந்த தடுப்பூசிகளை பயன்படுத்த மறுத்து விட்டது.
அதற்கு பதிலாக சினோவேக் என்ற தடுப்பூசியை உற்பத்தி செய்து பயன்படுத்தியது. மேலும் சர்வதேச கொரோனா தடுப்பூசிகளுக்கு எதிராக சீன அதிகாரிகள் செயல்பட்டனர். இந்த சர்வதேச தடுப்பூசியானது ஏதேனும் தொற்று ஏற்பட்டால் எப்படி நோய் எதிர்ப்பு ஆற்றலை உருவாக்க வேண்டும் என செல்களுக்கு கற்றுக் கொடுக்கும் பணியை செய்யும். ஆனால் சீனா கண்டுபிடித்த தடுப்பூசியால் பாதுகாப்பு அளிக்க முடியவில்லை. இந்த நிலையில் தற்போது மீண்டும் சீனாவில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் மீண்டும் நாடு முழுவதும் ஊரடங்கு மற்றும் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் கொந்தளித்த மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் போராட்டங்களால் அந்நாட்டு அரசு ஊரடங்கு தளர்வுகளை அறிவிக்க தொடங்கியுள்ளது. இதுகுறித்து “தி சிங்கப்பூர்” போஸ்ட் என்ற பத்திரிக்கை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, “சீனாவில் தீவிரமடைந்துள்ள கொரோனா தொற்றின் பாதிப்புக்கு காரணம் அந்நாட்டு அரசு தயாரித்த தடுப்பூசி தான். இது உலக நாடுகளின் மக்களுக்கு பெரிய சிக்கலை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் சினோவேக் தடுப்பூசிகள் மரணத்திற்கு எதிராக 61% திறனும், மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு எதிராக 55 சதவீத திறனுமே பெற்றிருந்தது.
ஆனால் சர்வதேச தடுப்பூசிகள் இவை இரண்டிலும் 90 சதவீத திறனுடன் உள்ளது. இது நாட்டு மக்களை கவலை அடைய செய்துள்ளது. மேலும் இந்த தடுப்பூசிகளை துருக்கி உள்ளிட்ட பல நாடுகள் கொள்முதல் செய்தது. ஆனால் அந்நாட்டு மக்கள் இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்ள முன்வரவில்லை. இந்நிலையில் இந்தோனேசியா, பிரேசில் ஆகிய நாடுகள் சீன தடுப்பூசிகளை வாங்குவதாக செய்த ஒப்பந்தத்தை கைவிட்டு சர்வதேச தடுப்பூசிகளுக்கு மாறி வருகின்றனர்” என அதில் கூறப்பட்டுள்ளது.