நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் டிரைலர் குறித்து தயாரிப்பு நிறுவனம் ஹிண்ட் கொடுத்துள்ளது.
தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாஸ்டர்’. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதி, மாளவிகா மோகன், சாந்தனு, சஞ்சீவ், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் அனிருத் இந்த திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த திரைப்படத்தை XB பிலிம் கிரியேட்டர்ஸ் தயாரித்துள்ளனர். தீபாவளியை முன்னிட்டு மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட்டானது.
மேலும் இந்த டீசர் 2.4 மில்லியன் லைக் பெற்று தென்னிந்தியாவில் அதிகம் லைக் செய்யப்பட்ட டீசர் என்ற பெருமையை பெற்றுள்ளது. இதையடுத்து இந்தத் திரைப்படத்தின் டீசர் குறித்து சில ட்வீட்களை யூடியூப் இந்தியா நிறுவனம் பதிவிட்டது. இதனை ரசிகர்கள் டிரெண்ட் செய்துவந்தனர். இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் ‘இது வெறும் டீசர் தான் நண்பா’ என்று ரசிகர்களுக்கு ஹிண்ட் கொடுத்துள்ளனர். இதனால் ரசிகர்கள் மாஸ்டர் திரைப்படத்தின் புதிய ட்ரைலர் வெளியாகும் என ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.