பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடிகர்களான சூரி விமல் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் நோயின் பாதிப்பு குறைந்தபாடில்லை. பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் ஊரடங்கானது தொடர்ந்து 6 வது கட்டநிலையில் அமுலில் இருந்து வருகிறது. ஊரடங்கு அமலில் இருந்துவரும் சூழ்நிலையில் வேலைக்காக வெளியூர் சென்று மாட்டிக் கொண்டவர்கள் இன்னும் சொந்த ஊர் திரும்பவில்லை. ஏதேனும் ஒரு அவசர காரியங்களுக்காக ஒரு மாவட்டத்திலிருந்து பிற மாவட்டங்களுக்கு செல்ல முடியவில்லை என்றும், மக்கள் வருந்தி வருகின்றனர்.
இத்தனை வருத்தத்தையும் மக்கள் தாங்கிக் கொள்ளவும் செய்கிறார்கள். அதற்கு காரணம் கொரோனா பாதிப்பை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக தான். மக்கள் ஒருபுறம் அரசுக்கு ஒத்துழைத்து வரும் பட்சத்தில், நடிகர்கள், சில பிரபலங்கள் ஊரடங்கு விதிகளை தங்களது சுயநலமான சந்தோசத்திற்காக மீறி கொரோனா பரவலுக்கும் காரணமாகி வருகின்றனர். அந்த வகையில், நடிகர்களான விமல், சூரி இருவரும் சில நாட்களுக்கு முன் இ பாஸ் பெறாமல் கொடைக்கானலுக்கு பயணம் செய்தது தொடர்பாக பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே வனப்பகுதிக்குள் விதியை மீறி சென்று மீன்பிடித்த விவகாரத்தில் இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஊரடங்கு விதியை மீறியதாகவும், தொற்று பரவ காரணமாக இருந்ததாகவும் கூறி அவர்கள் மீது தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இல் நடிகர் சூரி தமிழக அரசின் விழிப்புணர்வு விளம்பர படத்தில் இது ஒன்றும் ஹாலிடே அல்ல என்ஜாய் செய்வதற்கு தமிழக அரசு நீங்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக உங்களுக்கு ஓய்வு அளித்துள்ளது என்று அட்வைஸ் செய்து நடித்திருப்பார். தற்போது அவரே விதியை மீறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.