மதுரையில் ஓய்வுபெற்ற அதிகாரி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டரான முத்து என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் நோயால் பாதிக்கப்பட்டு மிகவும் அவதியுற்று வந்தார். இதில் மன விரக்தியடைந்த முத்து சம்பவத்தன்று பூச்சி மருந்தை குடித்துவிட்டு வீட்டில் மயங்கி விழுந்தார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவருக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.