பிரதமர் மோடியுடன் அம்பேத்கரை ஒப்பிட்டு இசையமைப்பாளர் இளையராஜா பேசிய கருத்தை யாரும் விமர்சிக்க வேண்டாமென முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளதாக, உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், “பிரதமர் மோடியையும், அம்பேத்கரையும் ஒப்பிட்டு இளையராஜா பேசியது அவரது சொந்த கருத்து.
இந்த விவகாரத்தில் யாரும் கருத்து சொல்ல வேண்டாம் என்று தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்லி விட்டார். எனவே, அவருடைய கருத்தை நாகரீகமற்ற முறையில் யார் விமர்சித்தாலும் தவறுதான்” என தெரிவித்துள்ளார்.