கனடாவில் நீதிபதி பார்ட்டிகளின் மூலம் கொரோனா தொற்று பரவினால் கொலை வழக்கு பதிவு மேற்கொள்ளப்படும் என்றுள்ளார்.
கனடாவில் வசித்து வரும் முஹம்மத் என்பவர் அவரது வீட்டில் கொரோனா விதிமுறைகளை மீறி 78 நபர்களுக்கு பார்ட்டியை வைத்துள்ளார். ஆனால் காவல்துறையினர் அங்கு சென்று பார்த்தபோது அங்கிருந்த காட்சிகள் இரவு விடுதி போல இருந்தது. இதனால் காவல்துறையினர் முகம்மதை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதன்பின் நீதிபதியான எலன் இது பார்ட்டியே அல்ல, மிகப்பெரிய குற்றச்செயல் என்றுள்ளார். மேலும் பார்ட்டியினுள் பங்கேற்ற நபர்களில் யாரேனும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்து விட்டாலோ அல்லது தன்னுடைய பாட்டிக்கு தொற்றை கடத்தினாலோ என்னை பொருத்தவரை முகம்மத் செய்தது மிகப்பெரிய கொலைக்குற்றம் என்று அவரின் மீது கடுமையாக விமர்சித்தார்.
மேலும் முகம்மத்திற்கு 5,000 டாலர்கள் அபராதம் மற்றும் ஒரு நாளுக்கான சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் யார்க் பல்கலைக்கழகத்தினுடைய சட்டக் கல்லூரியின் பேராசிரியரான லிசா, இவ்வழக்கில் நீதிபதி வழங்கிய தீர்ப்பை ஏற்கும் விதமாக அவர் வழங்கிய தீர்ப்பு மிகவும் சரியானது என்று கூறியுள்ளார்.